
பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால், நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஏற்கெனவே நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி பரிமளா.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு வழக்கில் இன்று வாய்தா இருந்தது. இருந்தும் இன்று நிர்மலாதேவி ஆஜராகாததால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிடிவாரன்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பரிமளா உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நவ.28 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால், நீதிபதி இந்த உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப் படுகிறது. ஆயினும், நிர்மலா தேவி மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால், சிகிச்சையில் இருக்கும் அவரால் இன்று ஆஜராக இயலவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.