
கணவன் போதையில் அசைவ உணவை சாப்பிட சொல்லி தனது மனைவியையும், மகனையும் வற்புறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த மனைவி அவரது தம்பி ,மகன் ஆகியோர் சேர்ந்து கணவனை கட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள மடத்துபட்டி பகுதியை சேர்ந்தவா் முத்துராஜ் இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் முத்துராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு அசைவ ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார்.
முத்துராஜ் குடிப்பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று முத்துராஜ் அசைவ உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அந்த அசைவ உணவை தனது மனைவியையும், மகனையும் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால் தங்கள் உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதால் அசைவ உணவை சாப்பிட மாட்டோம் என்று கூறி மறுத்து உள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் கேட்காமல் முத்துராஜ் சாப்பிடுமாறு தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி , அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துராஜை உருட்டு கட்டையால் அடித்து உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

கணவன் இறந்ததை தொடர்ந்து கணவர் தம்பி அழகருக்கு போன் செய்து தகவல் சொல்லி விட்டு தனலட்சுமி அவரது மகன் ,தம்பி ஆகிய மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.
தகவலறிந்து வீட்டிற்கு அழகர் சடலமாக கிடந்த முத்துராஜ் பார்த்துவிட்டு . வீட்டில் யாரும் இல்லாததால் உடனே வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உறவினர் வீட்டில் இருந்த தனலட்சுமி அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



