
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டா… குடும்பம் க்ளோஸ் ஆகிவிடும். இவர்களின் சதிவலையில் சிக்காதீர்கள்… என்று வேண்டுகோள் விடுத்தார் பாஜக., தமிழக தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன்.
ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டா குடும்பம் க்ளோஸ் ஆகிவிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், சிறுபான்மையினரை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்த திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக.,வினர் பேச்சைக் கேட்டு பெண்கள் கோலம் போடச் சென்றால் குடும்பம் அலங்கோலமாகிவிடும் என்றார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் !