சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல அதிமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
முன்னதாக, வியாழன் நேற்று சரத்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருந்தார். தொகுதியில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.



