சென்னை:
வெள்ளிக்கிழமை இன்று காலை முதல் அதிமுக., நிர்வாகிகள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற பணம் வாங்கியதாக பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல், எம்.ஜி.ஆர். பல்கலை துணைவேந்தர் கீதா லெட்சுமி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



