December 6, 2025, 3:53 PM
29.4 C
Chennai

நெல்லை: பயணிகள் கூட்டத்தால் தவறவிடும் ரயில்கள்! கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா?

nellai 2 - 2025

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு கவுன்டர்களை திறக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதுவதால் நுழைவாயிலை தாண்டியும் வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சாதாரண தினங்களில் கூட நெல்லையில் இருந்து ெசன்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, செந்தூர், அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ்கள் கூட்டத்தை அள்ளிச் செல்கின்றன.

பண்டிகை காலங்களில் இந்த ரயில்களில் கழிவறை வரை கூட்டம் காணப்படுகிறது. ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் பெறுவதற்கான கவுன்டர்கள் ரயில் நிலைய பழைய நுழைவாயில் பகுதியில் காணப்படுகிறது.

3 கவுன்டர்கள் அங்கு இருப்பினும் அவற்றில் 2 மட்டுமே எப்போதும் செயல்பாட்டில் உள்ளது. 3வது கவுன்டர் கூட்டம் அலைமோதும் நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டத்தால் முன்பதிவற்ற கவுன்டர்கள் முன்பு கூட்டம் நிரம்பி வழிகிறது.

சமீபத்திய பொங்கல் விடுமுறை முடிந்து பிற நகரங்களுக்கு சென்றவர்கள் சனி, ஞாயிற்று கிழமை மாலை நேரங்களில் முன்பதிவற்ற கவுன்டர்களில் மொத்தமாக திரண்டனர்.

இதனால் நுழைவாயில் பகுதியில் பொதுமக்கள் நுழைய முடியாத வகையில் வரிசை நீண்டது. இதில் சில பயணிகள் முன்பதிவற்ற டிக்கெட் பெற முடியாமல், கடைசியில் கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ்களை தவறவிட்டனர். கவுன்டரில் டிக்கெட் பெற முயலும்போது ரயில் போய்விட்டது என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் மூலம் புறநகர் செல்லும் பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டன.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்க கூடுதல் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் புதிய கட்டிட நுழைவாயில் பகுதியில் முன்பு ஒரு முன்பதிவற்ற கவுன்டர் செயல்பட்டு வந்தது.

முன்பதிவு மையங்கள் மாடியில் இருந்து கீழ்தளத்தில் செயல்பட தொடங்கிய நாள் முதல் அதை இழுத்து மூடிவிட்டனர். இதனால் பயணிகள் புதிய நுழைவாயில் பகுதியில் முன்பதிவற்ற டிக்கெட் எடுக்க வசதிகள் இல்லை. அப்பகுதியிலாவது கூடுதலாக ஒரு முன்பதிவற்ற கவுன்டர் அமைத்தால் பயணிகள் டிக்கெட் பெற்று செல்ல வசதிகள் கிடைக்கும்.

பண்டிகை காலங்களிலும், கூட்ட நெரிசல் உள்ள நாட்களிலும் சென்னை, கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் முன்பதிவற்ற பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் மத்தியில் உள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த 3 தினங்களாக நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். இதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories