
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆரியபட்டாள் வாசல் அருகே கருடமண்டபம் பகுதியை ஒட்டி இருந்த தேவஸ்தான பிரசாதக் கடை முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

திருக்கோயிலுக்குள் அமைந்துள்ள பிரசாதக்கடையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து குறித்து அறிந்ததும் உடனே தீயணைக்கும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பிரசாதக் கடை வைத்திருக்கும் உரிமையாளர் முரளி, அனைவரிடமும் அன்பாகவும் நன்கு பழகக் கூடியவர்! அது மட்டுமன்றி கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்களுக்கு பிரசாதங்கள்_இலவசமாகவும் வழங்கக் கூடியவர் என்று பலரும் வேதனை தெரிவித்தனர்.



