தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் தங்களது உண்டியல் சேமிப்புப் பணத்தை சுகாதாரப் பணியாளா்கள் நல நிதிக்காக சிறுவா்கள் இருவர் வழங்கினா்.
கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்கள் நல நிதியாக, தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சேர்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் மகன்கள் பிரசன்னா ஆனந்த், சிவகாா்த்திகேயன் ஆகியோா் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை வழங்கினா்.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் சென்று தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவா்களைப் பாராட்டினாா்.