21 நாள் கழிந்து நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு!

Published:

edappadi video conference1 - 2026
  • இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது.
  • 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன.
  • மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது.
  • தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.
  • 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன.
  • பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
  • மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.
  • 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும்
  • அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்
edappadi video conference2 - 2026

சென்னை மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக்தில் மேலும 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள 1 லட்சம் rapid test kit கருவிகள் வாங்கப்படவுள்ள.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும். 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன.

3, 371 வெண்டிலேட்ர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன, கொரோனாவின் தாக்கம் குறைய தனிமைப்படுத்தப்படுவதே ஒன்றே தீர்வு . விமான நிலையத்தில் 2 10, 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரானாவை ஒழிக்க முடியும். மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ. 500 கோடி வந்துள்ளது.

144 தடை உத்தரவை மீறியதாக 94, 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 94,152 பேர் கைதாகி ஜாமினில் வந்துள்ளனர். 72,242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில் உள்ளது. மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் அல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நோயின்தன்மை, வீரியத்தை உணர்ந்து மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

edappadi video conference - 2026

அத்யாவசியப் பொருட்கள் மக்களுக்கு விரைவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நடமாடும் காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களாகவே தெரிவிப்பது நல்லது. ஏப்.,14க்கு பிறகு, கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அதில் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img