
சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை மத்திய அரசு வண்டலூர் வரை நீடித்து அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அதிகாரி சுரேந்திரநாத் கூறுகையில், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்துக்கு மத்திய- மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு சரக்கு சேவை வசதிகளுக்காகவும் இந்த திட்டம் மேலும் 10 கி.மீட்டர் தூரம் வண்டலூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது. வண்டலூர் வெளி வட்ட சாலையில் நசரத்பேட்டையில் இந்த திட்டம் இணைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து ஆய்வு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ராட்சத தூண்கள், வழித்தடம் அமைக்க ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் வண்டலூர் வரை நீட்டிக்கப்படுவதால் சரக்கு லாரிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். சரக்கு லாரிகள் எளிதில் துறைமுகம் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்



