வடசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கக் காரணம் என்ன தெரியுமா? மாநகர ஆணையர் கூறும் காரணம் இதுதான்… அங்கே மக்கள் நெருக்கம் அதிகமா இருக்காம்!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஏப்.30 நேற்றைய மாலை நேர அறிக்கையின் படி 2323 ஆக உள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக ராயபுரம் மண்டலம் நோய்த்தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது. தற்போது திரு.வி.நகரில் அதைவிட அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநகர ஆணையர் இன்று கூறியபோது…
வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது.
கொரோனா நோய்த் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதால் நிச்சயம் நல்ல பலன் இருக்கும் என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர்!