
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் ரோட்டரிகிளப் சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் பொருளாளர் சரவணன் நகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 360 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ எடையுள்ள ரூ.500 மதிப்பிலான அரிசி சிப்பங்களை திமுக தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி வழங்கினார்.நிகழ்ச்சியில் பெருங்காடு சுப்பரமணியன் விஜயசுந்தர்,செல்வம்,கண்ணன்,சண்முகம்,மதிவாணன்,செந்தில்குமார்,தியாகராசன்,தீபக்,தாமஸ்,சத்ரு,விமல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி சாலையில் திமுக தலைமை கழக உத்தரவின் படி முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் நிதியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் தெற்கு ஒன்றிய செயலாளர்
பொன்கணேசன் நகரச்செயலாளர் ஆனந்த் பொதுக்குழு உறுப்பினர் கலைமணி முன்னிலையில் பேராவூரணி சாலை பகுதி 250 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
இதில் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் காசிநாதன்,சக்தி, ராமசாமி,கைலாசம் .தலைமைகழக பேச்சாளர் செல்வம் சத்தியசீலன் வின்சென்ட் முன்னாள் முன்னாள் நகர செயலாளர் ராசேந்திரன் செல்லத்துரை ஆவுடையார்கோயில் கலைசெல்வன்
வட்ட நிர்வாகிகளான மதி, சேகர்,பாஸ்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



