
சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து கடைகள் திறக்கப் படுவதால், பெருமளவில் மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதை அடுத்து நீண்ட வரிசையில் தள்ளுமுள்ளு இன்றி மக்கள் நிற்பதற்கு வசதியாக கம்புகளைக் கொண்டு கட்டி, வரிசை அமைத்து வருகிறார்கள். கடைகளுக்கு முன்னே குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடித்து குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வசதியாக கட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன.
மதுரையிலிருந்து.. சோழவந்தான் செல்லும் சாலையில் தேனூர் டாஸ்மாக் கடையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது போல் மதுரை அருகே உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளிலும் கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. குடிமகன்களை வரவேற்க பல்வேறுகடைகளும் தயாராகி வரும் நிலையில், கடைகளை அடுத்து உள்ள பொதுமக்கள் இந்த ஏற்பாடுகளைக் கண்டு முகம் சுளிப்பதுடன், அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

மதுரை அருகே சமயநல்லூர் டாஸ்மாக் கடை நாளைய மறு திறப்புக்கு தயாராகி வருகிறது.
நாளை டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:
- காலை 10 முதல் 1 வரை – 50 வயதுக்கு மேல்.
- 1 முதல் 3 வரை 40 முதல் 50 வயது வரை உள்ளோர்.
- 40 வயதிற்குள் உள்ளோர் 3 முதல் 5 மணி வரை.
- கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்த காவல்துறை கட்டுப்பாடு.
- செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை