
விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த ரசாயன வாயு. 8 பேர் மரணம்; 5000 பேருக்கு மேல் மூச்சு விட முடியாமல் மயக்கம்.
வியாழக்கிழமை அதிகாலை விசாகப் பட்டினம் தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷ வாயுவால் மூச்சுத்திணறி ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 ஆயிரம் பேருக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ரசாயன வாயு லீக் ஆகி மூன்று கிலோமீட்டர் வரை பரவியது. இந்த கேஸ் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் உடலில் மீது அரிப்புகள் கொப்புளங்கள் கண்களில் எரிச்சல் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் உள்ளூர்வாசிகள் ஆரோக்கிய கேடு தொல்லைகளுக்கு ஆளானார்கள்.
விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து ஏற்பட்டது.
இன்று விடியற்காலை 3 மணி அளவில் நகரத்திலுள்ள கோபாலபட்ணம் எல்லையில் ஆர்ஆர் வெங்கடாபுரம் என்ற இடத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிந்து மூன்று கிலோமீட்டர்கள் வரை பரவியுள்ளது.
இதனால் ஏற்பட்ட உடல் நிலை கோளாறுகளால் நூற்றுக்கணக்கானவர்களை அவசர அவசரமாக மருத்துவமனைகளுக்கு சேர்த்து வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தடைந்த எம்எல்ஏ கணபாபு, கலெக்டர் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கேஸ் லீக் ஆனதால் உள்ளூர்வாசிகள் பயத்தால் கதவுகளை மூடிக்கொண்டு வீடுகளிலேயே இருந்து விட்டதால் ஆபத்து அதிகம் ஆகிவிட்டது. வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போகுமாறு போலிஸார் எச்சரித்துள்ளார்கள். ஆனால் வீடுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததால் வீடுகளுக்குள் அடர்த்தியாக ரசாயன வாயு புகுந்துள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை சுற்று பக்க இடங்களில் உள்ள மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உடல்நிலை கோளாறு ஆளானவர்களில் அதிகமாக பெண்களும் சிறு குழந்தைகளும் உள்ளார்கள்.
இந்த விபத்துக்கு காரணத்தை இன்னும் அறிய வேண்டி உள்ளது. ஆனால். தொழிற்சாலையின் அலட்சியத்தால்தான் ரசாயன வாயு லீக் ஆனதாகவும் அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் பலமுறை தொழிற்சாலையை எச்சரித்துள்ளோம் என்று மக்கள் கூறுகிறார்கள்.

லாக்டௌன் ஆன காரணத்தால் தொழிற்சாலையை பூட்டி வைத்திருப்பதாலும் தொழிற்சாலையை சரியாக மெயின்டெயின் செய்யாததாலும் இவ்வாறு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனாவுக்காக ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ்களை அவசர அவசரமாக வரவழைத்து அவற்றில் மயக்கமடைந்தவர்களை ஏற்றிச் செல்கிறார்கள். ஒரு மாத குழந்தை கூட மயக்கம் அடைந்துள்ளதால் பெற்றோர் அழுது துடிக்கிறார்கள்.

சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை பரவி சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று கிராமங்களை இந்த ரசாயன விஷவாயு பாதித்து உள்ளதாக தெரிகிறது.
சைரன் ஒலித்து மக்களை வீடுகளை விட்டு வெளியே வரும்படி போலீசாயனர் எச்சரித்து வருவதல் இன்று காலை முதல் அங்கு மிகவும் பரபரப்பானசூழல் நிலவுகிறது. கசிந்த வாயுவின் அதிக அடர்த்தி காரணமாக இறப்பு விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்களிடம் அச்சம் நிலவுகிறது.



