மரக்கிளை முறிந்து, பைக்கில் சென்ற பெண் மீது விழுந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி காயத்ரி, 38. தம்பதியின் இரு பெண் குழந்தைகள், கோவை புலியகுளம் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க தம்பதி நேற்று மதியம் பள்ளிக்கு சென்றனர்.கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில், காயத்ரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களுடன் அவ்வழியாக பைக்கில் சென்ற சிலரும் காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயத்ரியை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரே