மதுரையில் வெள்ள பூண்டு கிலோ ரூ. 100..! கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல் வணிகம்
garlic sales in madurai
garlic sales in madurai

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் மினி வாகனங்களில் கொண்டு வரப்படும் வெள்ளப் பூண்டினை, வியாபாரிகள் ஒலி பெருக்கி மூலம் கூவி, கூவி விற்பதை காணமுடிகிறது.

மதுரை அண்ணாநகர், கே.கே.நகர், வண்டியூர், தெப்பக்குளம், சிம்மக்கல், புதூர், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் வாகனங்களில் வந்த வியாபாரிகள் வெள்ளபூடு கிலோ ஓன்றுக்கு ரூ. 100..ம், அரை கிலோ ரூ. 60 என்றும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

garlic sales
garlic sales

இது குறித்து வெள்ளைப் பூண்டு வியாபாரி கூறியது…. நாங்கள், திண்டுக்கல் பகுதிகளிலிருந்து வெள்ளபூடை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி, மினி வேன்கள் மூலம் ஊர், ஊராக தினசரி விற்பனை செய்து வருகிறோம்.

கொரோனா காலத்துக்கு முன்பு விற்பனை மிக நன்றாக இருந்தது. தற்போது மக்கள் கையில் போதிய கையிருப்பு இல்லையா அல்லது வேறு என்ன என்று தெரியவில்லை…குறைவாகவே விற்பனை ஆகிறது. அரசு அலுவலர்கள், பணம் இருப்பவர்கள் மட்டுமே கிலோ கணக்கில் வாங்குகின்றனர். சாதாரண மக்களில் பலர் வாங்க தயக்கம் காட்டுவது தெரிகிறது என்றார்.

  • செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.