
சென்னை:
பேரவைக்குள் குட்கா எடுத்துசென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள குட்காவை ஜூலை மாதம் 19 ம் தேதி சட்டபேரவைக்குள் 21 திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்தனர். இதனால் இன்று தலைமைசெயலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த உரிமைக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் உட்பட 21 பேருக்கு செப்டம்பர் 5 ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் பேரவை உரிமைக்குழு கூட்டம் நடந்தது.
தலைமைச் செயலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன், கீதா, சரவணன், பரமேஸ்வரி மருதுமுத்து, ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் சுந்தர், மதிவாணன், ரகுபதி ரவிச்சந்திரன், பெரியகருப்பன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக.,வைச் சேர்ந்த 7 பேர் பங்கேற்கவில்லை.



