
அதிமுக., செயற்குழு மற்றும் பொதுக்குழு செப்.12 ந் தேதி வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.
இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில் சசிகலா குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்துக்கான அழைப்பு, செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




