
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநோயாளிகளை பார்வையிட்டு உணவு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோயில் தாலுகா பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற மனநோயாளிகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அழைத்து வந்து அறந்தாங்கி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த்மோகன் பார்வையிட்டு அவர்களுக்கு உணவு வழங்கி அவர்களை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்
ஷஅவருடன் தலைமை மருத்துவர் சேகர் வட்டாரமருத்துவ அலுவலர் டாக்டர் முகமது இதிரிஸ் தாசில்தார் மார்டின் லுாதர்கிங் நகராட்சி கமிசினர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்



