புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் பணிபுரிந்து இறந்த காசாளர் உட்பட இருவருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை குருமகா சன்னிதானம் உத்தரவின் படி கண்காணிப்பாளர் வழங்கினார்…
ஆவுடையார்கோயிலில் பணிபுரிந்த காசாளர் மகாலி
ங்கம்(83) மற்றும் துப்புரவு பணியாளர் கவிதா(40) ஆகிய இருவரும் அண்மையில் இறந்தனர் இறந்தவர்கள் குறித்து திருவாருர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவீழிமிழலை திருவீழிநாதர் கோயில் உள்துறை கண்காணிப்பார் உத்திராபதி தேசிகர் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாணபரமாச்சாரிய சுவாமிகள் கவனதிற்கு கொண்டு சென்று நிலையில் கொடையுள்ளம் கொண்ட சன்னிதானம் வழங்கிய நிதியை இருவர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.




