மசாஜ் என்ற பெயரில் நடந்த மசா..! ரைடில் சிக்கிய ஆயுர்வேத மசாஜ் சென்டர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
ayurvedic-massage-center
ayurvedic-massage-center

ஒரு ஆயுர்வேத மையத்துக்குள் விபச்சாரம் நடத்திய இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள நரிமேடு பகுதியில் ஒரு ஆயுர்வேத நிலையம் நடைபெற்று வந்தது. இந்த ஆயுர்வேத மையத்தை கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த முகமது உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தார்கள் .

இந்நிலையில் அந்த ஆயுர்வேத மையத்தில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
அதனால் அந்த ஆயுர்வேத மையத்தை ரகசியமாக கண்காணித்தார்கள்.

massage-1
massage-1

அப்போது அந்த ஆயுர்வேத மையத்துக்குள் நிறைய வாலிபர்கள் அடிக்கடி போய் வருவதும் ,நிறைய கார்களில் வாடிக்கையாளர்கள் வந்து போவதை கண்டு அங்கு ரெய்டு செல்ல முடிவெடுத்தார்கள் .

அதன்படி கடந்த திங்கள்கிழமை மாலை போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை முற்றுகையிட்டார்கள். அப்போது அந்த மையத்துக்குள்ளிருந்து சில வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் இங்கு சில ஆயுர்வேத எண்ணெய் கொடுத்து அதை தேய்ச்சி விட பெண்களையும் கொடுப்பதாக கூறினார்.

massage-center
massage-center

இன்னும் சிலர் அதிக பணம் கொடுத்தால் அந்த பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். அதனால் போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை நடத்திய உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகியோரை கைது செய்தார்கள் .

மேலும் அங்கிருந்த 32 வயதான இரண்டு பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்கள் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள் .

மேலும் அங்கிருந்து தப்பியோடிவிட்ட இரண்டு பெண்கள் மற்றும் மூன்று வாலிபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். அதன் பிறகு அந்த ஆயுர்வேத மையத்தை பூட்டி சீல் வைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.