மதுரையில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற சென்னை பறந்த இளைஞனின் இதயம்!

Published:

heart - 2026

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயது பெண் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரையில் விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயம், வெறும், 50 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யபட்டது.

Madhurai - 2026

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான பெண் மணி ஒருவர் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யபட வேண்டிய தேவை ஏற்பட்டது.

ambulance - 2026

இந்த நிலையில் மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய 21 வயது இளைஞர் தமிழ்மணி, வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் மூளைசாவு அடைந்த 21 வயது இளைஞர் தமிழ்மணி உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர் ஒப்புதல் அளித்தனர்.

இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து 50 நிமிடத்தில் தமிழ்மணியின் இதயம் சென்னை குரோம்பேட்டை கொண்டு வரப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
hospital - 2026

இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் பக்காவாக செய்திருந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.

குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் சிகிச்சை இயக்குனர் சந்தீப் அத்தாவர் தலைமையிலான மருத்துவர்கள் பாதிக்கபட்ட பெண்மணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Related articles

Recent articles

spot_img