ஆசைக்கு மறுத்த நண்பனின் தாய்! கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற இளைஞன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumar - 2026

ஆசைக்கு இணங்க மறுத்த நண்பனின் தாயை 20 வயது இளைஞர் அடித்துக் கொலைசெய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மகசாமுந்த் மாவட்டம் பாஸ்னா காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி படேல்(20). சிந்து என்ற பட்டப்பெயருடன் வலம்வரும் அவர், அப்பகுதியில் அவ்வப்போது சிறு சிறு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் வசிக்கும் பகுதியில் சிந்துவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். சிந்து நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அப்போது சிந்துவுடைய நண்பனின் தாய் மீது அவர் கண்வைத்துள்ளார்.

சம்பவத்தன்று நண்பனின் வீட்டிற்கு சென்றப்போது, நண்பனின் 42 வயதான தாய், அவர் வீட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

விவசாய தோட்டத்தில் அறுவடை இயந்திரத்தை பார்க்க அழைத்திருந்ததாக கூறியிருக்கிறார். வீட்டிற்கு அருகிலேயே வயல் இருந்ததால் அந்த பெண் சிந்துவை அழைத்துச் சென்றிருக்கிறார்.

செல்லும் வழியில் திடீரென அலறல் சத்தம் கேட்கவே, அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு அப்பெண் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, சிந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் ஆசைக்கு இணைங்க வற்புறுத்தியப்போது தான் மறுத்தால் அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கிராம மக்களே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தப்போதும் பலன் அளிக்காமல் அவர் வியாழக்கிழமை உயிரிழந்துவிட்டார். இதனிடையே தலைமறைவாக இருந்த சிந்துவை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பபகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.