கொரோனா: தலைமை காவலர் உயிரிழப்பு!

Published:

corono-dead-body-3
corono-dead-body-3

திசையன்விளை அடுத்த உவரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தலைமை காவலர் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த உவரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் விஜயகுமார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் குமரி மாவட்டம் நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, விஜயகுமாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், உவரி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img