
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் மற்ற நாட்களில் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளன.ர் குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த முறை திடீரென முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால், பொதுப் போக்குவரத்து முடங்கியது.
இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் வெளிமாநில தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். பலர் வாரங்களில் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்படிப்பட்ட ஒரு நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முறை வடமாநிலத்தவர்கள் குறிப்பாக சென்னையில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி விட்டனர்.
இப்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், வடமாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்து விட்டனர். இதனால் அவர்கள் கூட்டம் கூட்டமாக சேந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.
இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்கள் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றது. அடுத்த ரயிலுக்காக காத்திருப்பவர்களால் சென்னை ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது.