
முன்னாள் சுகாதார துறை அமைச்சரும் விராலிமலை அதிமுக சட்டசபை உறுப்பினருமான விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து 25 ஆயிரத்தை நெருங்குகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 27 உட்படப் புதிதாக 24,898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், முன்னாள் சுகாதார துறை அமைச்சரும் விராலிமலை அதிமுக சட்டசபை உறுப்பினருமான விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யுங்கள். அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
I have been tested positive for #Covid19 today at the Public Health Lab. After my test, I have isolated myself and I request everyone who were in my contact to get tested. Kindly follow Covid guidelines and stay safe.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) May 6, 2021