
கொரோனா நோய்க்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. விவசாய கூலி வேலை செய்துவரும் இவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னிடம் ஒரு வைத்தியம் உள்ளதாக கூறி உயிருடன் இருக்கும் பாம்பை கடித்து சாப்பிட்டுள்ளார் வடிவேலு.
இவர் வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றை உயிருடன் பிடித்து கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை வாயில் வைத்து கடித்து சாப்பிட்டுள்ளார்.

இதனை அருகிலிருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
இதை தொடர்ந்து வடிவேலுவை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் இருந்த வடிவேலு விசமில்லாத தண்ணீர் பாம்பை கடித்து சாப்பிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்கும் சூழ்நிலையில் மதுரை வடிவேலுவின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.