
பி.எஸ்.பி.பி., பள்ளி நிர்வாகிகளான நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் உங்களுடன் இருக்கிறேன். போராடி வெற்றி பெறுங்கள்’ என, நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
அவர், பள்ளி நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில், ராம்குமார் கூறியிருப்பதாவது:
நான் விவேகானந்தா கல்லுாரியில் படித்தவன். எனக்கு நிறைய, நல்ல பிராமண நண்பர்கள் உள்ளனர். அப்பாவும், அந்த சமூகத்துக்கு மிகவும் ஆதரவளித்தார். அதாவது, அந்த காலகட்டத்தில், பிராமணர்கள் என்றால், ‘காமடியன்’களாக தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டது.
ஆனால், அப்பா, ‘பிரஸ்டீஜ் பத்மநாபன், பாரீஸ்டர் ரஜினிகாந்த், பரீட்சைக்கு நேரமாச்சு’ உள்ளிட்ட படங்களில், பிராமணர் வேடங்களை ஏற்று, அந்த சமூகத்துக்கு மரியாதையை தந்தார். எனக்கு, ஒய்.ஜி.மகேந்திரன், சுதா உள்ளிட்டோர் நல்ல நண்பர்கள்,. நான் உங்களுடன் இருக்கிறேன்.
பிராமணர்களை சீண்டினால், அவர்கள் புஜங்களை வலிமையாக்கி எழுவர். ராஜராஜ சோழன், பிராமண போர் வீரர்களை வைத்திருந்ததை நாம் அறிவோமே. மராட்டியர்கள், பேஸ்வாக்களிடம் பிராமண போர் வீரர்கள் இருந்துள்ளனரே.எனவே, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பிராமண சங்கங்களுடன் இணைந்து, போராடி வெற்றி பெறுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.