
இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா பரவலை மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இருந்தாலும் நாம் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 43. இளையராஜாவின் கிராமத்து தமிழ் பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை.

கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதே படத்தில் சிறுவயது பார்த்திபனாகவும் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பார்த்திபன் தன் இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
. நண்பன்/அன்புத் தம்பி
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 7, 2021
ஓவியர் இளையராஜா மறைவு,
மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?
ARTIST ELAYARAJA INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN https://t.co/wRaYm8fHM8 via @YouTube .