Homeஉள்ளூர் செய்திகள்ஒரே குழியில் புதையுங்கள்.. மனவிரக்தியில் கணவன் மனைவி தற்கொலை!

ஒரே குழியில் புதையுங்கள்.. மனவிரக்தியில் கணவன் மனைவி தற்கொலை!

SUSIED MAN
SUSIED MAN

சென்னை மந்தவெளியில் மனவுளைச்சல் காரணமாக வளர்ப்பு நாயை கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளி ஆண்டிமன்ய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் (55), சாந்தி (48) தம்பதியினர். லோகநாதன் கார் டிங்கரிங் பணி செய்து வருவதுடன், மனைவியுடன் இணைந்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் பல ஆண்டுகளாக மனவுளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை லோகநாதன் தனது நண்பரான தனபாலுக்கு, தாங்கள் இருவரும் பெரும் மனவுளைச்சலில் இருந்து வருவதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், தங்களை ஒரே குழியில் புதைத்துவிடுமாறும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனபால் உடனடியாக லோகநாதன் வீட்டிற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லோகனாதனும் அவர் மனைவி சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர்.

மேலும், தம்பதியர் தாங்கள் வளர்த்து வந்த நாயின் கழுத்திலும் பிளாஸ்டிக் கவரால் இருகக்கட்டிய நிலையில் நாயும் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது.

இதனையடுத்து செய்வதறியாது திகைத்த தனபால் இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தம்பதியரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வளர்ப்பு நாயின் சடலத்தையும் அப்புறப்படுத்தினர்.

மேலும், தம்பதியரின் தற்கொலைக்கு குழந்தையின்மையால் ஏற்பட்ட மனவுளைச்சல் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,957FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

Latest News : Read Now...