பிறந்தநாள் கொண்டாட்ட விழா: ஆண்நண்பனுடன்‌‌ ரிசார்ட் சென்ற சிறுமி! குளிர்பானம்.. மயக்க மருந்து.. பாலியல் வன்கொடுமை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
vankodumai - 2026

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சக நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, ஜூலை 3ஆம் தேதி இரவு, கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் தனது நண்பர் ஸ்வீட்டோஸ் (20) என்பவருடன் சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஸ்வீட்டோஸ் சிறுமிக்கு தெரியாமல் அங்கு வைத்திருந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து பிறகு அந்த சிறுமி அதை குடித்த உடன் அவர் சுயநினைவின்றி கீழே சரிந்து விழுந்துள்ளார்.

இதை அடுத்து தள்ளாடிய அந்த சிறுமியை அவர் ரிசார்ட்டில் உள்ள ஒரு தனி அறைக்கு கூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது

இதையடுத்து நேற்று காலை அந்த சிறுமிக்கு மீண்டும் சுயநினைவு வந்தபோது அவர் தான் ஒரு தனி அறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் அவர் தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதை அவர் அறிந்தார்

இதையடுத்து அந்த சிறுமி உடனடியாக தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார் பின்னர் தனக்கு நேர்ந்த அனைத்து கொடுமைகளையும் தன்னுடைய தாயாரிடம் விவரித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை கேட்டு உடனடியாக அதிர்ச்சி அடைந்த தாய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்வீட்டோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.