
பிரபல நாடக நடிகரான ராம்கி உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ராம்கி என்கிற என்கிற ராமகிருஷ்ணன். மூத்த நடிகரான இவர் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார்.
சீரியல் மற்றும் சினிமா படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராம்கி நேற்று மாலை காலமானார்.
அவரது மறைவுக்கு மேடை நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



