குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர் பலி..

IMG 20230102 WA0101 - 2026
IMG 20230102 WA0102 - 2026
பொன் இருளப்பன்

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து 30 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்இருளப்பன். 30 வயதான இவர் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில், மனைவி சபரீஸ்வரியுடன் ஶ்ரீரெங்க பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

பொன் இருளப்பன் நகருக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் டிபி மில்ஸ் சாலையில் சென்றுள்ளார். சாலையின் நடுவே தாமிரபரணி குடிநீர் குழாயில் இருந்த கசிவை நீக்குவதற்காக 10 அடி ஆழத்தில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

இருட்டில் சென்ற பொன் இருளப்பன் சாலையின் நடுவே இருந்த அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார். இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இவர் விழுந்தது வெளியே தெரியவில்லை. வீடு திரும்பாத அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற பொது மக்கள் குழிக்குள் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது இறந்து கிடந்தது பொன் இருளப்பன் என்பது தெரிய வந்தது.

உறவினர்களுக்கு தகவல் அளித்த காவல் துறையினர் பொன் இருளப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் பெரிய அளவிலான குழி இருப்பது குறித்து முறையான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததே இன்றைய விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. குழியை சுற்றி சிறிய அளவிலான டேப் மட்டும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அலட்சியப் போக்கினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை சுற்றி தடுப்பு பலகை அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories