அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவேண்டி காமன் பண்டிகை விழா நடந்தது.
அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவளம் செழிக்க விவசாயம் செழிக்க காமன்பண்டிகை எனப்படு;ம் மன்மதன் வழிபாடு விழா நடந்தது.முற்காலத்தில் சிவன் தவம் இருந்தபோது அவரது தவத்தை கலைத்த மன்மதனை தன்நெற்றிகண்ணால் அழித்து மீண்டும் மன்மதன் மனைவி ரதி தேவி தவமிருந்து மன்மதன் உயிர்பெற்ற வரலாறுதொடர்புடைய வழிபாடாகும்.மன்மதன் வழிபாடு என்பது உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க தொன்று தொட்டு செய்யப்படும் வழிபாடாகும்.
விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து கோயிலை வலம் வந்து மன்மதசுவாமிக்கு அபிN~கம் செய்தனர் இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்தனர்.
அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டு காமன் விழா
Popular Categories



