அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையூரில் ராமநாதன் சேர்வைக்காரர் 9ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.
பந்தயத்திற்கு காங்கிரஸ்மாநில துணை தலைவர் செல்வரத்தினம் தலைமையில் மாநில ஊடக பிரிவு தலைவர் ராமசந்திரன் நிர்வாகிகள் சிங்கவனம் ஜமீன் தமிழ்செல்வன்,ரவி முன்னிலையில் நடந்தது.
நடுமாடு பந்தயத்தில் முதல்பரிசினை ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டடிணம் முகமது வண்டியும்
பெரியமாடு பந்தயத்தில் முதல்பரிசை மருங்கூர் இஎம்எஸ் வண்டியும்
கரிச்சான் மாடு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல்பிரிவில் முதல்பரிசை மாவிளங்காவயல் வண்டியும் .2வது பிரிவில் முதல்பரிசை மருங்கூர் இஎம்எஸ் வண்டியும் பெற்றது.
விழாவில் நிர்வாகிகள் வீராச்சாமி,முத்து,சேக்அப்துல்லா,தமிழ்செல்வன்,ரவி குப்புச்சாமி,சுகுமார்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.




