
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் யானை ருக்கு நேற்று இரவு மரணம் அடைந்தது.
திருவண்ணாமலை கோயில் விழாக்களில் கம்பீரமாக உலா வந்தது யானை ருக்கு. இந்நிலையில் திடீரென நேற்று இரவு யானை காலமானது. இந்த செய்தி கேட்டு, கோயிலுக்கு வரும் அன்பர்கள், பெரிதும் துயர் அடைந்தனர். காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க பெருவாரியாக மக்கள் குவிந்து தங்கள் கண்ணீர் அஞ்சலீயை செலுத்தி வருகின்றனர்.



