
சென்னை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் இன்று மாலை அவர் ஆளுநரை சந்திக்கிறார்.
பொதுவான விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஸ்டாலினுடன் பேசுவார் என்று கூறப்படுகிறது. ஆளுநரின் ஆய்வுகளுக்கு திமுக., ஆங்காங்கே கண்டனம் தெரிவித்து கறுப்புச் சட்டையுடன் போராட்டங்களை நடத்துகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மார்ச் 29 இறுதிநாள் என கெடு விதிக்கப் பட்டுள்ளது. அன்று வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையானால், மார்ச் 30ம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடத்தப் பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட வுள்ளது.
இன்னும் பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தில் வெடிக்கும் என்ற நிலையில், ஸ்டாலினை அழைத்துள்ளார் ஆளுநர். இதன்படி இன்று மாலை 6 மணியளவில் சென்னை கிண்டி ராஜ்பவனுக்கு ஸ்டாலின் செல்கிறார்.



