
உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்..
இதுதான் இளையராஜா சொல்லும் பதிலாக இருக்கும் என்று இளையராஜாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இளையராஜா, அண்மையில் கூகுள் அலுவலகத்தில் பேசியபோது, தாம் யுடீயூப்பில் இயேசு உயிர்த்தெழுதல் குறித்து, அவ்வாறு நடக்கவே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பார்த்ததாகவும், இயேசு உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் தாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றும், ஆனால், ரமண மகரிஷி அவ்வாறு உயிர்த்தெழுந்ததை சிறு வயதில் உணர்ந்ததை பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவ்வாறு வந்த ஒரு மகானைத் தாம் பின்னரும் உயிருடன் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.
அவரது இயல்பான பேச்சு ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டது. குறிப்பாக ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கருத்துச் சுதந்திரம் என்றும், அதற்கு எதிராகப் போராடுபவர்களை வெறியர்கள் என்றும் வர்ணித்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்போது மாறுபட்ட அளவுகோலைக் கொண்டுள்ளனர் என்று திட்டித் தீர்க்கின்றனர் சமூக ஊடகங்களில்!
இந்நிலையில் ஏசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான வகையில் கருத்து கூறியதாக, இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதல் குறித்து இளையராஜா கூறிய கருத்துக்கள், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இளையராஜா மீது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது…
ஏசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் ஏசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், இளையராஜா கருத்துக்கு பலர் தங்கள் பக்கங்களில் ஆதரவாக பதிவுகளை செய்து வருகின்றனர்.
அவற்றில் ஒன்று…




