
சென்னை: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேநீர்க் கடை வைத்துள்ள ஆதி என்பவரின் மகன் ஆகாஷும், அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் சம்பத்குமாரின் மகள் ரம்யாவும் காதலித்து வந்துள்ளனர். ரம்யா பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்த மீஞ்சூர் காவல் துறையினரும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினரும் இருவரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.



