கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ் என்று அமைச்சர் ஜெயக்குமார் கமலை கலாய்த்துள்ளார்.
அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கமல் மீதான அக்கறையில் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது…
அதிமுக., நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கி மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசை கண்டித்து அதிமுக., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. ஜனநாயக ரீதியில்., அதிமுக தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார். சட்டத்துக்கு புறம்பாக முன்னறிவிப்பு இன்றி சாலை மறியல், கற்களை வீசுவது, அரசு பேருந்துகளை நாசப்படுத்துவது போன்றவைகளை திமுக செய்து வருகிறது.
எப்படியாவது ஆட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று திமுக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஆனால் திமுக முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
போராட்டம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பின்றி சாலை மறியல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. காவிரி வழக்கு விசாரணை 9-ம் தேதி வருகிறது. நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
ஆனால், அறவழியில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களை அதிமுக செய்து வருகிறது. பல இடங்களில் கல்வீச்சு, பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த செயல்களை எப்படி அனுமதிக்க இயலும் ?. திமுக உள்நோக்கத்துடன் போராடி வருகிறது.
திமுகவை போல 4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடிக்காமல், 9 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது அதிமுக என்றார் ஜெயக்குமார்.
இதனிடையே, அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை எதிர்த்து விமர்சிக்காதது ஏன் ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக.,வின் துரோகத்தை எடுத்துக் கூறிய ஜெயக்குமார், மழுப்பலாகப் பதிலளித்து நகர்ந்தார்.
மேலும், ”அரசியல் அப்ரண்டிஸ்” கமலஹாசன். அவர் ஒரு ரிட்டையர்டு நடிகர் என்று கமல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதனிடையே, கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது; வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக் கூடியவர் கமல்! என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னொரு விதத்தில் தாக்கியிருக்கிறார்.