ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில், இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.



