
ஐபிஎல்., போட்டிக்கு காவிரி விவகாரத்தினால் எதிர்ப்பு இப்போது வலுத்து வருகிறது.
சென்னை ஐபிஎல் அணியின் வருகைக்காக வரையப் பட்டிருந்த மதிற் சுவர் ஓவியத்தை, சிலர் மாற்றி எழுதுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தப் படத்தில், சென்னை அணிக்கு விசில் போடு என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை அடித்து விட்டு WE NEED CAUVERY – DONT WANT IPL என்று மாற்றி எழுதியதாகக் காட்டப் படுகிறது.
ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களைப் புறக்கணித்து சென்னை அணி நிர்வாகம் மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அப்போதே, சென்னை அணிக்கான ஆதரவை பலர் விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், காவிரி விவகாரம் வேறு மக்களிடம் உணர்ச்சிகரமான போராட்டமாக உருவெடுத்துள்ள நிலையில், ஐபிஎல்., போட்டிகளைப் புறக்கணிக்க பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.



