
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கான இலச்சினை (லோகோ) வெளியிடப் பட்டுள்ளது. இந்த இலச்சினையுடன் பயணம் தொடங்குகிறது. திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து நாளை ஸ்டாலின் இதனைத் தொடங்கிவைக்கிறார்.
நடப்போம் – குரல் கொடுப்போம் – மீட்டெடுப்போம் என்ற வாசகம் இலச்சினையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து, நெட்டிசன்கள் பலர் தங்கள் ப்ரொபைல் பிக்சராக இதனை வைத்துள்ளனர்.



