திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஆவேசமான மேடை ஒன்றில் பேசி கொண்டிருந்தார். இந்த பேச்சினை அனைத்து செய்தி சேனல்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. காவிரிக்காக வாழ்நாள் முழுவதும் சிறை செல்லவும் தயார் என ஸ்டாலின் உணர்ச்சிப்பெருக்குடன் பேசி கொண்டிருந்த போது திடீரென ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ரஜினி பேட்டி அளிப்பதை அறிந்த அனைத்து ஊடகங்களும் உடனடியாக ஸ்டாலினின் நேரடி ஒளிபரப்பை ரத்து செய்துவிட்டு ரஜினியின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்கிவிட்டன. திமுக ஆதர்வு டிவி மட்டுமே கடைசி வரை ஸ்டாலின் பேச்சை ஒளிபரப்பு செய்தது.
ஸ்டாலின் பேச்சை திடீரென கட் செய்த ஊடகங்கள் குறித்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலினை விட ரஜினியை ஊடகங்கள் பெரிதாக கருதுவதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வந்ததால் திமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.