சென்னை சேப்பாக்கத்தில் சாலையில் நடந்து செல்லும் அனைவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலையில் போராட்டக்காரர்கள் நடமாடுகிறார்களா என்பதை கண்காணித்து வருகிறது போலீஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் மைதானத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
சேப்பாக்கம் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். மொபைல் போன் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிரிக்கெட்டை காண வரும் ரசிகர்கள் மொபைல் போனை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
Mobile Phones will be Allowed for todays Match!💛
(You can also use free wifi😉) #Yellove #WhistlePodu #CSKvsKKR #CSKHomeComing #YelLove— Whistle Podu Army – CSK Fan Club (@CSKFansOfficial) April 10, 2018