தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று சொல்லி வந்தார்கள் ஒரு காலத்தில். பின்னாளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வன்முறைகள் வரன்முறைகளற்றுப் போனதால், இப்போது அமைதிப் பூங்கா என்ற பெயர் கல்லறையில் புதைந்து போயுள்ளது!
தமிழகம் இப்போது போராட்டங்களின் களனாய் மாறிப் போயுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் போராட்டங்களுக்கான பரிசோதனைக் களனாய் தமிழக மண் மாறியுள்ளது. நாளொரு போராட்டம். நாளொரு ஆர்ப்பாட்டம் என அன்றாடப் பணிகள் அறவே அற்றுப் போகும் அளவுக்கு புதிது புதிதாய் பிரச்னைகளைக் கிளப்பி வருகிறார்கள்.
தற்போது காவிரிப் பிரச்னை, ஐபிஎல் பிரச்னையாக மாறிப் போய், நேற்று அண்ணா சாலையையே அதகளப் படுத்தி விட்டார்கள். இதன் உச்சகட்டமாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மைதானத்துக்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்து அடித்து விரட்டினர்.
அதற்கு பழி தீர்க்க, அண்ணாசாலையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடித்துத் துவைத்தனர். தங்களின் மூர்க்கத்தனங்களை எல்லாம் காட்டி, சீருடையில் பணியில் இருந்த காவலர்கள் மீது தாக்கினார்.
இதைத்தான் ரஜினி இன்று காலை தனது டிவிட்டர் பதில், இதை வன்முறையின் உச்ச கட்டம் என்று குறிப்பிட்டார்.
The worst form of violence in law and order situation is attack on uniformed personnel on duty.This form of violence has to be tackled immediately as it poses grave danger to our country.We need more stringent laws to punish the perpetrators of attack on police personnel on duty.
— Rajinikanth (@rajinikanth) April 11, 2018
உண்மையில் இது போன்ற மனோபாவம் வளர்வது, தமிழகத்தின் தன்மைக்கே கேடுதான்!! இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வைகோ, சீமான், அமீர் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், மார்க்க நெறி வெளித்தெரியாமல் தமிழன் எனும் பெயரில் தலிபானிசத்தை வளர்க்கும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் காவல் துறையால் நன்கு கவனிக்கப் பட வேண்டியவர்கள் என்கிறார்கள் இந்த நிகழ்வுகளை செய்திகளில் பார்த்து ரத்தம் கொதித்துப் போன தமிழர்கள்!





