தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனைச் சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அவை பாதுகாப்பு கருதி புளிஞ்சூர் சோதனைச் சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப் படுகின்றன.
தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. இதனால் தமிழகம் கொந்தளிப்புடன் திகழும் நிலையில், கர்நாடகப் பேருந்துகளின் பாதுகாப்பு கருதி அவை எல்லையிலேயே தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன.




