காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக., சார்பில் காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் மீட்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு ர்தனித்தனியே போராட்டங்களை நடத்தி வருகின்றன. நியூட்ரினோ எதிர்ப்பு என்று மதிமுக., சார்பில் ’நடை’ப்பயணத்தை ’கை’யில் எடுத்துக் கொண்டார் வைகோ.
ஸ்டெர்லைட், ஐபிஎல் எதிர்ப்பு என்று போராட்டக்காரர்களுக்கு பரபரப்பான நாட்களாகத் திகழும் இந்நாளில், அதிமுக., பேரைச் சொல்லி திடீர் எழுச்சிக் கூட்டத்தை நடத்திய ஜெ.தீபா, இப்போது போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி போராட்டத்தில் குதிக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜெ தீபா நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். ஈரோடு ரயில் நிலையம் முன்பு தீபா பேரவை நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.