கடலூர்: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை தடுக்க வேண்டும் என்று பலத்த எதிர்ப்பு கிளப்பப் பட்டுள்ளது.
வீரநாராயணபுரம் எனும் வீராணத்தில் உள்ள ஏரியில் இருந்துதான் குழாய்கள் மூலம் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அந்தத் ஹிட்டத்தை கைவிடும் ப்டி தமிழக அரசை உள்ளூர் மக்கள் கோரி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சின்னப்பநாயக்கன் பாளையம் கிராம மக்கள் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் ஏற்றும் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.