சென்னை திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப் பட்ட தளவாடங்கள் குறித்து பெருமிதமாகக் கூறினார்.
பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன் இன் இந்தியா திட்டத்தின் இதயம் போன்றது. தமிழகம் தேவையான உள்கட்டமைப்பு, மனித வளத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யுமாறு தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்ற்றியபோது மோடி அழைப்பு விடுத்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன். ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ந்நாம் முன்னேறியுள்ளோம். இந்த எக்ஸ்போ- கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 50 சத தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டவை என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.
நிர்மலா சீதாராமனை அடுத்துப் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பிரதமரை வரவேற்ற அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறை திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
ஜெயலலிதா உருவாக்கிய தொலைநோக்கு 2020 திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு முக்கிய இடம் உள்ளது. சேர சோழ, பாண்டிய பேரரசுகள் காலத்திலிருந்தே படைக் கலன்கள் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பாதுகாப்புத் துறை வளர்ச்சியில் தமிழகம் 20 சதவீதத்திற்கு மேல் பங்காற்றி வருகிறது. பாதுகாப்புத் துறை உற்பத்தி தமிழகத்தில் அமையும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் தமிழகம் வழங்கும். தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி துறையில் நுழைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியவை..